தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் 2 நாள் உண்ணாவிரத போராட்டத்தை இன்று துவங்கினர்.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒப்பந்த நிறுவனம் மூலம் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தும் முறையை ரத்து செய்ய வேண்டும். ஓராண்டுக்கும் மேலாக பணியாற்றும் அனைத்துத் தொழிலாளர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச மாத ஊதியம்நிர்ணயம் செய்ய வேண்டும், பணிக்கொடை உள்ளிட்ட சலுகைககள் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை உண்ணாவிரத போராட்டம் துவங்கியது.
சங்க தலைவரும் துறைமுக ஆணையக்குழு உறுப்பினருமான எஸ். பாலகிருஷணன் தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தை சிஐடியு மாநிலச் செயலாளரும், அகில இந்திய நீர்வழி போக்குவரத்து சம்மேளனத்தின் செயலாளருமான ஆர். ரசல் துவக்கி வைத்தார்.