பியர்ல்சிட்டி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

74பார்த்தது
பியர்ல்சிட்டி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
தூத்துக்குடி பியர்ல்சிட்டி ரோட்டரி சங்க 2024-25 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ரோட்டரி அரங்கில் நடந்தது. சங்க தலைவர் முஹம்மது இப்ராஹிம் கூட்டத்தை தொடங்கி வைத்தார். பைசர் இறைவணக்கம் வாசித்தார். லிங்கசுதன் நான்குவழி சோதனை வாசித்தார். சங்க தலைவர் முஹம்மது இப்ராஹிம் வரவேற்றுப் பேசினார். செயலாளர் விக்னேஷ் ஆண்டறிக்கை வாசித்தார்.

செந்தில் ஆறுமுகம் புதிய தலைவரை அறிமுகம் செய்து பேசினார். தொடர்ந்து ரோட்டரி மாவட்ட ஆளுநர் மீரான்கான் சலீம் 2024-25 ஆண்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட விக்னேஷ்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட விக்டரிடம் சங்கத்தின் பட்டய சான்றிதழை வழங்கினார். பின்னர் தலைவர் விக்னேஷ் ஏற்புரை வழங்கி தனது நிர்வாக குழுவை அறிவித்தார்.

பின்னர் சேவைதிட்டங்களாக பள்ளி மாணவி ஒருவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. முதியோர் மற்றும் குழந்தைகள் இல்லங்களுக்கு பலசரக்கு பொருட்கள் வழங்கப்பட்டது. சங்க இதழ் கோரல் வாய்ஸ் வெளியிடப்பட்டது. புதிய உறுப்பினர்கள் ரோட்டரியில் இணைக்கப்பட்டனர். பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் முதலிடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி