தூத்துக்குடி: விண்ணப்பித்த அனைவருக்கும் பட்டா.. அமைச்சர் உறுதி

76பார்த்தது
தூத்துக்குடி: விண்ணப்பித்த அனைவருக்கும் பட்டா.. அமைச்சர் உறுதி
தூத்துக்குடியில் பட்டா கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க முறைப்படுத்தி பட்டா வழங்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். தூத்துக்குடி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் கணினி பட்டா விண்ணப்பிக்கும் முகாம் நடைபெற்றது. திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் ஆன கீதாஜீவன் தலைமை வகித்தார். கனிமொழி எம்.பி. பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். 

பின்னர் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டு பேசுகையில், "தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க தூத்துக்குடியில் முதற்கட்டமாக நடைபெற்ற மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில் 3,624 பேர் மனு அளித்திருந்தனர். அதில் உள்ள ஆவணங்கள் அனைத்தும் ஸ்கேன் செய்யப்பட்டு வருவாய்துறையினர் சரிபார்த்து பட்டா வழங்கப்படுகிறது. 

இதற்கு ஆட்சியர் ஒரு குழு அமைத்துள்ளார். அந்தக் குழுக்கள் முழுமையாக இந்தப் பணியை செய்து வருகின்றன. இரண்டு கட்டமாக கணினி பட்டா இதுவரை 282 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மற்ற அனைவருக்கும் முறையாக முறைப்படுத்தி ஆய்வுகள் மேற்கொண்டு வழங்கப்படும். இதற்கான முழுப் பங்களிப்பு கலெக்டரும் ஈடுபட்டு பணியாற்றுகிறார். எல்லோரும் ஒத்துழைப்பு வழங்கி இந்த வரலாற்று நிகழ்வுகளுக்கு பெருமை சேர்க்க வேண்டும்" என்று பேசினார்.

தொடர்புடைய செய்தி