தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் நினைவு தினம்: அவரது ஆதரவாளர்கள் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை தூத்துக்குடி மாநகர பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் 13ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. தூத்துக்குடி அருகே உள்ள அலங்காரதட்டு பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் மாநில தலைவரும் அவரது சகோதரியுமான பார்வதி சண்முகச்சாமி மற்றும் பொதுச் செயலாளரும் பசுபதி பாண்டியன் மகளுமான சந்தன பிரியா ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வந்திருந்த தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என ஏராளமானார் பசுபதி பாண்டியன் நினைவிடத்தில் மாலை அணிவித்து தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் தலைமையில் 1800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதை முன்னிட்டு மாநகரின் பல்வேறு பகுதிகளில் சோதனைச் சாவடிகள் மற்றும் தடுப்பு வேலிகளை அமைத்து காவல்துறையினரின் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.