தூத்துக்குடி மாவட்டம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மாசி திருவிழா கொண்டாடப்படுவதால் திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி வழியாக மதுரை செல்லும் பேருந்துகள் அனைத்தும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிவதாலும் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து மதுரைக்கு நேரடியாக போதிய பேருந்து வசதிகள் இயக்கப்படாதால் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் மதுரை செல்லும் பேருந்துக்காக மற்றும் மதுரை வழியாக ஈரோடு திருப்பூர் கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் சுமார் 3 மணி நேரம் காத்து கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
முதியவர்கள், குழந்தைகளை வைத்துக்கொண்டு தாங்கள் அவதிப்பட்டு வருவதாகவும் முகூர்த்த நாள் இருக்கும் நிலையிலும் திருவிழா காலங்களிலும் அரசு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது தாங்கள் பேருந்துகள் முறையாக இயக்கப்பட்டு வருவதாகவும் திருச்செந்தூரில் இருந்து வரும் அனைத்து பேருந்துகளும் பயணிகள் கூட்டமாக உள்ளது என தெரிவித்தார்.
தூத்துக்குடியில் இருந்து நேரடியாக மதுரைக்கு சுமார் எட்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நடத்துனர் தட்டுப்பாடு காரணமாக இரண்டு பேருந்து மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.