பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

80பார்த்தது
தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தின் 442-ஆவது ஆண்டு தேர் திருவிழா மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் கொடியேற்றம் துவங்கியது. ஜாதி மத வேறுபாடு இன்றி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மரியே வாழ்க என விண்ணதிர பக்தி முழக்கமிட்டு புறா பலூன் பறக்கவிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி மாதா கோவில் பங்குத்தந்தை ஸ்டார்வின் மாதா கோவில் பங்குச்செயலாளர் எட்வின் பாண்டியன் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி