பனிமய மாதா பேராலய திருவிழா 2ஆம் நாள் திருப்பலி!

77பார்த்தது
பனிமய மாதா பேராலய திருவிழா 2ஆம் நாள் திருப்பலி!
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழாவின் 2ஆம் நாள் திருப்பலி நிகழ்ச்சியில் மாியின் ஊழியம் சபை அருட்சகோதாிகள் பங்கேற்றனர்.

தூத்துக்குடி தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 442 ஆவது ஆண்டுத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை 10 நாள்கள் திருவிழா நாள்களில் உலக நன்மை, சமாதானம், மாணவா்-மாணவிகள் கல்வி மேன்மை, வியாபாரிகள், மீனவா்கள், பனைத் தொழிலாளா்கள், உப்பளத் தொழிலாளா்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான சிறப்பு திருப்பலிகள், நற்கருணை பவனி நடைபெறும்.

இந்நிலையில், 2ஆம் நாள் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 8. 30 மணி திருப்பலிக்கு மாியின் ஊழியம் சபை அருட்சகோதாிகள் புனித மாியன்னைக் கல்லூாி, புனித அலாய்சியஸ் மேல்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மணவிகள் திருயாத்திரையாக திரு இருதயங்களின் பேராலயத்திலிருந்தூ மாதா கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தனர். இந்நிகழ்வில் கல்லூாி முதல்வா் அருட்சகோதாி ஜெசிபொ்ணான்டோ, கல்லூாி செயலா் அருட்சகோதாி சிபானா துணை முதல்வா் அருட்சகோதாி எழிலரசி மற்றும் பேராசிாியா்கள் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தொடர்புடைய செய்தி