தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வரும் வடிகால் மற்றும் சாலை பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட செயின்ட் மேரிஸ் காலனி, கலைஞர் நகர், திருவள்ளுவர் நகர் மற்றும் மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வடிகால் மற்றும் சாலை பணிகளையும் மேலும் பணிகள் ஆரம்பமாக போகும் பகுதிகளையும் மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், "இந்தப் பகுதிகளானது கடந்த காலத்தில் மழை வெள்ளத்தினால் மிகவும் பாதிப்படைந்த ஒரு பகுதியாகவும் ஆகவே மேலும் புதிய வழித்தடத்தில் வடிகால் ஒன்றினை அமைப்பதற்காக பார்வையிட்டு பணிகளை வரும் நாட்களில் விரைந்து ஆரம்பிக்க ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். இது போன்ற பணிகளின் நாள் மழைநீர் விரைந்து வெளியேறுவதற்கு மேலும் ஒரு வாய்ப்பாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்று தெரிவித்தார்.
ஆய்வின்போது, திமுக பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தம்பி நிர்மல்ராஜ், வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.