தூத்துக்குடி அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையில் பாராளுமன்றத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சட்ட மேதை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றிய அண்ணல் அம்பேத்கரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் பேசியதை தொடர்ந்து நாடு முழுவதும் மத்திய அமைச்சர் எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் பல்வேறு ஜனநாயக அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன
இதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்பது உடன் பதவியை விட்டு விலக வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் இக்பால் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் பல்வேறு ஜனநாயக அமைப்பினர் கலந்து கொண்டனர்