தூத்துக்குடி: புதிய பேருந்துகளை துவக்கி வைத்த அமைச்சர் கீதாஜீவன்

72பார்த்தது
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் இருந்து தூத்துக்குடியில் இருந்து குலையன் கரிசல் பகுதிக்கு ஒரு பேருந்தும், மற்றொரு பேருந்து கோவில்பட்டியில் இருந்து குருவிகுளம் பகுதிக்கு என இரண்டு புதிய பேருந்துகளை தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதை தொடர்ந்து திமுகவினர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்கள். இதில் திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், பெருமாள் கோவில் அறங்காவல குழு தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட திமுக மகளிர் அணியினர் உள்ளிட்ட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி