பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்கிய அமைச்சர் கீதா ஜீவன்.

84பார்த்தது
முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி 102 வது பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் கீதா ஜீவன் கேக் வெட்டி அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 9 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்தார்.



மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி 102 வது பிறந்த நாள் இன்று தமிழக முழுவதும் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு கலைஞர் அரங்கம் முன்பு உள்ள அவரது திருவுருச்சிலைக்கு
சமுகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து
பழைய பேருந்து நிலையம் முன்பு 102 கிலோ எடை கொண்ட கேக்கை அமைச்சர் கீதா ஜீவன் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்.

பின்னர் தூத்துக்குடி
அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமையில் இன்று பிறந்த 9 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அமைச்சர் கீதா ஜீவன் அணிவித்தார்.

.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி