தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வாரந்தோறும் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடிபெற்று வருகிறது. தூத்துக்குடி வடக்கு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தலைமையில் நடந்தது. துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலை வைத்தார்.
மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். பின்னர் அவர் பேசியதாவது, தமிழக முழுவதும் முதலமைச்சர் ஆணைக்கிணங்க மாநகராட்சி பகுதிகளில் வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் 4 மண்டலங்களில் வாரந்தோறும் புதன்கிழமை முகாம் நடந்து வருகிறது. இதில் ஆரம்பத்தில் அதிக அளவு மனுக்கள் வந்தாலும் தற்போது குறைந்த அளவுகள் மனுக்கள் வருகின்றனர். மேலும், குடிதண்ணீர், சாக்கடை வசதி, இறப்பு, பிறப்பு சான்றிதழ் உள்பட அடிப்படை வசதிகளுக்கான மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது.