தூத்துக்குடி மாநகராட்சி உள்ள பள்ளிகளில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்களை ஜெகன் பெரியசாமி வழங்கினார்
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன பள்ளிகள் திறக்கப்பட்ட இன்று மாணவ மாணவிகளுக்கு பாட புத்தகங்களை வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 20 தொடக்க நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டன அந்த வகையில் தூத்துக்குடி சிவந்தா குளம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கினார் மேலும் பள்ளிக்கு வந்த அனைத்து மாணவிகளுக்கும் இனிப்புகளையும் மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் முத்துமாரி பாப்பாத்தி திமுக பொதுக்குழு உறுப்பினர் கோர்ட் ராஜா பள்ளி ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்