தூத்துக்குடியில் புதிய சாலை பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட எட்டையாபுரம் ரோடு ஹவுசிங் போர்டு பகுதியில் நடைபெற்று வரும் புதிய தார் சாலை மற்றும் பாதாள சாக்கடை துணை கழிவு நீர் ஏற்று நிலையத்தை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.