தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வாரம் தோறும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மண்டல வாரியாக நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று வடக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமினை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்து, பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், மாமன்ற உறுப்பினர்கள் ரெங்கசாமி, காந்திமதி, ஜெயசீலி, கற்பககனி, தெய்வேந்திரன், அந்தோணி மார்ஷலின், நாகேஸ்வரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.