தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவருக்கு சுந்தரி என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். முத்துக்குமார் ஒப்பந்த அடிப்படையில் வெளிநாடு சென்று வேலை செய்வது வழக்கம். அந்த வகையில் கடந்த 21 ஆம் தேதி தாய்லாந்திற்கு சென்றுள்ளார். முன்னதாக ஏஜென்ட் மூலம் செல்ல வேண்டாம் என அவரது மனைவி தடுத்தும் அவர் கேட்கவில்லை. ஆன்லைனில் ஒரு கம்பெனியை நம்பி சென்றார். பேங்காக் வரை அவரது மனைவியுடன் தொடர்பில் இருந்த முத்துக்குமாரை தற்போது தொடர்புகொள்ள முடியவில்லை என அவரது மனைவி வேதனை தெரிவித்துள்ளார்.