மாரியம்மன் கோயில் கொடை விழா: முளைப்பாரி ஊர்வலம்

55பார்த்தது
மாரியம்மன் கோயில் கொடை விழா: முளைப்பாரி ஊர்வலம்
தூத்துக்குடி மேலூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.


தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற தெப்பக்குளம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் கொடை விழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் திருவிழா கடந்த 26-ஆம் தேதி தொடங்கியது. இவ்விழாவில், தினமும் மாலையில் அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை, கோலாட்டம், கும்மியாட்டம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  


ஏப். 1ஆம் தேதி மாலை தீர்த்தவாரி, அம்மனுக்கு மாகாப்பு தீபாரணை நடந்தது. இன்று 2ஆம் தேதி கொடை விழாவை முன்னிட்டு விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து ரதவீதி சுற்றி ஊர்வலமாக வந்தனர். கும்பாபிஷேகம், மதியக் கொடை விழா, கஞ்சி வார்த்தல், தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு பூஜை, இரவு 7 மணிக்கு 108 முளைப்பாரி,   1508 மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. விழாவில் திராள பக்தர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி