சாலை வசதி செய்து கொடுத்த மேயருக்கு பாராட்டு!

66பார்த்தது
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் மேயர் பேசுகையில்,

புதிதாக கட்டிடம் கட்டுபவர்கள், கட்டிட கழிவுகளை வீடுகளின் முன்னாள் கொட்டக் கூடாது. இதனால் சாலை அமைக்கும்போது சிரமம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க மாநகராட்சியின் தாழ்வான பகுதிகளில் கட்டிட கழிவுகளை கொட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து, மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும். நகரில் உள்ள சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால் சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

கூட்டத்தில், 100க்கு மேற்ப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். மேலும், மாநகராட்சி 5வது வார்டுக்கு உட்பட்ட கிருஷ்ணராயபுரம் கிழக்கு 2, 3வது தெரு பகுதிகளில் சாலை மற்றும் வடிகால் வசதி அமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. அப்பகுதியை நேரில் ஆய்வு செய்து சாலை மற்றும் வடிகால் வசதி பனிகளை அமைத்து தந்த மேயர் ஜெகன் பெரியசாமிக்கு பொதுமக்கள் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி