தூத்துக்குடி: மன்னர் தேர்மாறன் தபால் தலை வெளியிட கோரிக்கை

60பார்த்தது
தூத்துக்குடி: மன்னர் தேர்மாறன் தபால் தலை வெளியிட கோரிக்கை
மாமன்னர் தேர்மாறன் தபால் தலை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத் தலைவர் ராம சீனிவாசனை சந்தித்து அனைத்து ஊர் பரத குல ஊர்க்குழுக்களினர், தேர் மாறன் மீட்புக் குழு, முத்துக்குளித்துறை பரதநல தலைமை சங்கத்தினர், தமிழ்நாடு வணிகர் நல சங்கத்தினர், குரூஸ் பர்னாந்து மக்கள் மன்றத்தினர், குரூஸ் பர்னாந்து மக்கள் பேரவை நிர்வாகிகள் மனு அளித்தனர். அதில், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரும் 16ஆம் மாமன்னருமான தொன் கபிரியேல் தெக் குரூஸ் வாஸ் கோமஸ் பரத வர்ம பாண்டியன் (என்ற) தேர்மாறன் வரைபட ஓவியத்தை தூத்துக்குடியில் புதிதாக புனரமைக்கப்படும் விமான நிலையத்தில் வைக்க கோரியும், அவரது உருவம் பதித்த தபால் தலை மத்திய அரசால் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

தொடர்புடைய செய்தி