தூத்துக்குடி இன்று முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் துவங்குவதை முன்னிட்டு ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் அனைத்தும் கரை திரும்பின தூத்துக்குடி, தருவை குளம், வேம்பார் உள்ளிட்ட பகுதிகளில் விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகங்களில் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மீன்பிடிக்கடைக்கால நிவாரணத்தை உயர்த்தி வழங்கவும் தமிழக கடற் பகுதிகளில் கேரள மீனவர்கள் மீன்பிடிப்பதை தடை செய்யவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.