தூத்துக்குடி மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் புதுப்பிக்கப்பட்ட அலுவலக கட்டிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது விழாவிற்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார் இதில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர்.
தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியை கனிமொழி கருணாநிதி எம்பி ஏற்றி வைத்து மழை நேரத்தில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்கள் தூய்மை பணியாளர்களுக்கு விருதுகளை கனிமொழி கருணாநிதி எம்பி அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் வழங்கினார்கள் மேலும் தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி பணி செய்வதற்கான பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினார்கள் இதைத்தொடர்ந்து விழாவில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்பி மழை நேரத்தில் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட போது மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் சிறப்பான பணியாற்றினர்கள் இதன் மூலம் பொது மக்கள் பாதுகாக்கப்பட்டன அவர்களுக்கு பாராட்டு விழா எடுத்துள்ளது வரவேற்பு உரியது மேலும் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளருக்கு நன்றி என கனிமொழி கருணாநிதி எம்பி தெரிவித்தார்