தூத்துக்குடி: மின் மேலாண்மை இயக்குனர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் பேட்டி

65பார்த்தது
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேலாண்மை இயக்குனர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் பேட்டி அளித்தார். அப்போது தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 1, 2, 3 யூனிட்கள் பாதிப்பு அடைந்துள்ளது. 1, 2 யூனிட்களில் உள்ள கேபிள் வயர்கள் அதிக அளவில் பாதிப்பு அடைந்துள்ளதால் இதனை சரி செய்து மீண்டும் இயக்க இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஆகும். 3 யூனிட்டில் குறைந்த பாதிப்பு மட்டுமே உள்ளதால் சில வாரங்களில் அது சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி செய்யப்படும்.

 தீ விபத்தில் சேதமடைந்த பொருட்களின் மொத்த மதிப்பு முழுமையாக கணக்கீடு செய்யப்பட்டு பின்னர் தெரிவிக்கப்படும். தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து மதிப்பீடு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 3 யூனிட்களில் சேதமடைந்துள்ளதால் அங்கு பணியாற்றகூடிய ஊழியர்கள் உடன்குடி, போன்ற அனல்மின் நிலையங்களுக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட உள்ளதாக எழுந்த புகார்கள் அனைத்தும் வதந்தி என்றார். ‌

தொடர்புடைய செய்தி