தூத்துக்குடி மாநகர பகுதிகளில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தற்போது பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது இந்நிலையில் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது
இதைத்தொடர்ந்து தற்போது தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது திடீரென பெய்த இந்த மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மலையில் நனைந்தபடி சென்றனர் இதேபோன்று வேலைக்கு செல்வோரும் மாலையில் நனைந்தபடி சென்றனர்.
மேலும் தாழ்வான பகுதிகளில் மீண்டும் மழை நீர் தேங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.