ஹீட் ஸ்ட்ரோக்: பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

50பார்த்தது
ஹீட் ஸ்ட்ரோக்: பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
ஹீட் ஸ்ட்ரோக் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு உள்ளது. அதனுடைய அறிகுறிகள் என்ன? இது வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்று தூத்துக்குடி அருள்ராஜ் மருத்துவமனை மருத்துவர், சர்க்கரை நோய் நிபுணர் ஆர்த்தி கண்ணன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "தமிழகத்தில் வெயில் உச்சகட்டத்தில் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை எப்படி பாதுகாத்து கொள்வது. சம்மர் சீசன்ல Heat stroke பற்றி பேசுவது முக்கியமான ஒன்று. Heat stroke வர காரணம் என்ன, இது யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகமாக இருக்கு, இதனுடைய அறிகுறிகள் எப்படி இருக்கும், இது வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்று சொல்றேன் கேளுங்க.

குறிப்பாக நமது உடல் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் இருக்கலாம். இந்த 40 டிகிரி செல்சியஸ் மேல் வெப்பநிலை வெளிபட்டால் நமது உடலுக்கு நீர் சத்து குறைபாடு (dehydration) ஏற்படுகிறது. நீர் சத்து குறைபாடு நமது உடலில் ஏற்படுவதினால் Electrolyte imbalance மற்றும் உப்பு சத்து குறைபாடு ஏற்படுகிறது. நீர் சத்து குறைபாடு மற்றும் உப்பு சத்து குறைபாடு தொடர்ச்சியாக இருந்தால் மூளைக்கு வர பாதிப்புகள் ரொம்பவும் அதிகம். இது எல்லாம் சேர்ந்தால் உங்களுக்கு Heat stroke வரும்

தொடர்புடைய செய்தி