தூத்துக்குடியில் இலவச மருத்துவ முகாம்!

75பார்த்தது
தூத்துக்குடியில் இலவச மருத்துவ முகாம்!
தூத்துக்குடியில் உதடு மற்றும் உள் அண்ணம் பிளவுபட்டோருக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, தூத்துக்குடி ஸ்பிக் நகர் ரோட்டரி சங்கம், மதுரைமீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் தூத்துக்குடி ஸ்பிக் நகர் ஆபிஸர்ஸ் கிளப்பில் உதடு மற்றும் உள் அண்ணம் பிளவுபட்டோருக்கான மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு ஸ்பிக் நகர் ரோட்டரி சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் கண்ணன் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் ராமசுப்பு அனைவரையும் வரவேற்றார். தூத்துக்குடி ஸ்பிக் நிறுவன முழு நேர இயக்குனர் பாலு மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார். முகாமில் 60-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். இதில் ஸ்பிக் நகர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பாலமுருகன், ரமேஷ், வளனரசு, மணிபாரதி, பொன்னுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.