போலீசாரின் முயற்சியால் கல்லூரியில் மாணவர்கள் சேர்ப்பு!

65பார்த்தது
போலீசாரின் முயற்சியால் கல்லூரியில் மாணவர்கள் சேர்ப்பு!
தூத்துக்குடியில் கல்லூரியில் நீக்கம் செய்யப்பட்ட 2 மாணவர்களை போலீசாரின் முயற்சியால் மீண்டும் சேர்க்கப்பட்டதனால் உண்ணாவிரத போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டனர்.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் கல்வி கட்டண உயர்வை கண்டித்து கல்லூரி மாணவர்கள் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கடந்த ஜூலை 7ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் தொடர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த சந்தன செல்வம், நேசமணி, அலெக்சாண்டர் ஆகிய 3 மாணவர்களை கல்லூரி நிர்வாகம் நிரந்தரமாக நீக்கம் செய்து உத்தரவிட்டது.

உயர்த்தப்பட்ட சுயநிதி பிரிவு கட்டணத்தை குறைப்பது தொடர்பாக காமராஜர் கல்வி குழும உறுப்பினர்கள் மத்தியில் விவாதித்த பின்னர் அறிவிக்கிறோம் என கல்லூரி நிர்வாகம் கோட்டாட்சியர் மூலம் தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில், தென்பாகம் சப். இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ், ஏட்டு சுதாகர் பாலசிங், தனீபிரிவு ஏட்டு ராஜேஷ், ஆனந்த் ஆகியோர் மாணவர்களின் நிரந்தர நீக்கத்தை ரத்து செய்யுமாறு காமராஜர் கல்லூரி நிர்வாகத்தை கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து 3 மாணவர்களும் தங்கள் தவறை உணர்ந்ததால் மீண்டும் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். கல்லூரி நிர்வாகத்தின் முடிவால் உண்ணாவிரத போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டனர்.

தொடர்புடைய செய்தி