தசரா விழா: காய்கறிகள் விலை உயர்வு! பொதுமக்கள் கவலை

62பார்த்தது
தசரா திருவிழா துவங்கி உள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர் மேலும் புரட்டாசி மாதம் என்பதால் அசைவ உணவுகளை தவிர்த்து காய்கறி உணவு வகையிலேயே அதிக அளவு உன்பர்

இந்நிலையில் இதன் காரணமாகவும் வரத்து குறைவு காரணமாகவும் தூத்துக்குடி காய்கறி சந்தையில் காய்கறி விலை உயர்ந்து காணப்பட்டது பட்டர் பீன்ஸ் கிலோ 200 ரூபாய் வரையும் பீன்ஸ் கிலோ 170 ரூபாய் வரையும் அவரைக்காய் கிலோ 100 ரூபாய் வரையும் முருங்கைக்காய் கிலோ 80 ரூபாய் வரையும் உருளைக்கிழங்கு கிலோ 50 ரூபாய் வரையும் கத்தரிக்காய் கிலோ 40 ரூபாய் வரை கேரட் கிலோஅறுபது ரூபாய் வரையும் பாகற்காய் கிலோ 80 ரூபாய் வரையும் விற்பனையாகிறது

மேலும் கன்னியாகுமரி மாவட்டம் பகுதியில் தேங்காய் விளைச்சல் பாதிப்பு காரணமாக தேங்காய் விலையும் கிடுகிடு என உயர்ந்துள்ளது வழக்கமாக கிலோ 35 ரூபாய்க்கு தேங்காய் தற்போது கிலோ 60 முதல் 65 ரூபாய்க்கு வரை விற்பனை செய்யப்படுகிறது கிலோவுக்கு 20 முதல் 25 ரூபாய் வரை உயர்ந்து காணப்படுகிறது

இந்த விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி