தூத்துக்குடியில் புத்தாண்டை முன்னிட்டு 24 வது வார்டு திமுக மற்றும் பூபால் ராயபுரம் ஆசிக் கைஸ் இளைஞர் அணி சார்பில் தூய்மை பணியாளர்கள் 30 பேருக்கு உயிருடன் கோழி மற்றும் சமையலுக்கு தேவையான பொருட்கள் காய்கறிகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடியில் இன்று புத்தாண்டு வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதை தொடர்ந்து தூத்துக்குடி 24 வது வார்டு திமுக மற்றும் பூபால் ராயபுரம் ஆசிக் கைஸ் இளைஞர் அணி சார்பில் பூபால் ராயபுரம் பகுதியில் வைத்து தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாநகர திமுக மீனவர் அணி அமைப்பாளர் டேனியல், தலைமையில் துணை மேயர் ஜெனிட்டா,
24வது திமுக மாமன்ற உறுப்பினர் மெடில்டா டேனியல், ஆகியோர் கலந்து கொண்டு 30க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களுக்கு உயிருடன் கோழி மற்றும் காய்கறிகள் சமையல் பொருட்கள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மண்டல தலைவர் செல்வராஜ், ஆஷிக் கைஸ் இளைஞர் அணி வினித், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
.