கதர் அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனை; கனிமொழி எம்பி

71பார்த்தது
தூத்துக்குடி காந்தி ஜெயந்தி முன்னிட்டு பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் கதர் அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனையை பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி துவக்கி வைத்தார்

இன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது இதை முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அண்ணல் காந்தியடிகளின் சிலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அமைச்சர் கீதா ஜீவன் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி கதர் அங்காடி மையத்தில் தீபாவளி சிறப்பு கதர் பொருட்கள் விற்பனையை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாவட்ட ஆட்சியர் தலைவர் இளம் பகவத் ஆகியோர் கலந்து கொண்டனர்

இந்த ஆண்டு கதர் அங்காடி சார்பில் ஒரு கோடியே 56 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அந்த விற்பனையை எட்டும் வகையில் இன்று விற்பனை துவக்கி வைக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி