லாரிகளில் டீசல் திருட்டு அதிகரிப்பு: மர்ம கும்பல் அட்டகாசம்!

56பார்த்தது
லாரிகளில் டீசல் திருட்டு அதிகரிப்பு: மர்ம கும்பல் அட்டகாசம்!
தூத்துக்குடியில் லாரிகளில் டீசல் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

துறைமுக நகரான தூத்துக்குடிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் வந்து செல்கின்றன. இந்த லாரிகளை புற நகர் பகுதிகளில் நிறுத்தி விட்டு டிரைவர்கள் ஓய்வு எடுப்பது வழக்கும். இந்த சமயத்தில் மர்ம நபர்கள் லாரிகளில் இருந்து டீசல்களை திருடி வருகின்றனர். இது போல் சமீபத்தில் தாப்பாத்தி பகுதியில் நிறுத்தியிருந்த லாரியில் 400 லிட்டர் டீசல் திருடுபோயுள்ளது.

இது தொடர்பாக லாரி டிரைவர் முத்தையாபுரம் லேபர் காலனியைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் மாசார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது போல் டீசல் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக லாரி டிரைவர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது. இது தாெடர்பாக லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், ஷிப்பிங் கம்பெனி உரிமையாளர்கள் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியை சந்தித்து புகார் அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி