தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவிலுக்கு சொந்தமான தேருக்கு அமைச்சர் கீதா ஜீவன் சொந்த முயற்சியில் சுமார் 8 லட்சம் மதிப்பிலான கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மிகவும் வரவேற்றுள்ளனர். ஆனால் கண்ணாடி கூண்டு அமைப்பதற்கு முன் தேரை சுத்தம் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.