தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்பதே தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மற்றும் மாநகர திமுக சார்பில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார் இதைத்தொடர்ந்து இன்று மாலை அவர் பதவி ஏற்க உள்ளார் இந்த அறிவிப்பு திமுகவினர் இடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ள நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மற்றும் மாநகர திமுக சார்பில் தூத்துக்குடியில் உள்ள கலைஞர் அரங்கம் முன்பாக தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வழக்கறிஞர் பாலகுருசாமி, கலைச்செல்வி திலகராஜ், திமுக மாவட்ட பிரதிநிதியும் வட்டச் செயலாளருமான தெர்மல் சக்திவேல், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், திமுக வட்ட செயலாளர்கள் கதிரேசன், வழக்கறிஞர் சதீஷ்குமார், பாலன், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம்,
மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி, ரவி, உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்