மின்கட்டண உயர்வை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்!

82பார்த்தது
மின்கட்டண உயர்வை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்!
தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்திய திமுக அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்தும், அதை திரும்பப் பெற வலியுறுத்தியும், ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு வகைகள் தட்டுபாட்டை கண்டித்தும், விவசாயிகளுக்கு காவிரி நீரை பெற்று தர மறுத்த தமிழக அரசை கண்டித்தும் தூத்துக்குடியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் விவிடி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தயாளலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் அலெக்ஸாண்டர் முன்னிலை வகித்தார். மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் கிருஷ்ணன் கண்டன உரையாற்றினார். மாவட்ட பொருளாளர் விஜயன் வரவேற்றார். இதில், நிர்வாகிகள் வல்லதுரை, மாலதி, ராமகிருஷ்ணன், திருவன், ஜெயக்குமார், மந்திரமூர்த்தி, மயில்ராஜ், சுரேஷ், நாராயண மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி