மத்திய அரசை கண்டித்து கனிமொழி எம்பி தலைமையில் ஆர்ப்பாட்டம்

83பார்த்தது
தூத்துக்குடி மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தலைமை தாங்கினார் இதில் ஆயிரக்கணக்கான திமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் எஸ் ஆர் ஆனந்த சேகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், மாநில பேச்சாளர் சரத் பாலா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்ம சக்தி, கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி, மாவட்ட பிரதிநிதி தெர்மல் சக்திவேல், பகுதி செயலாளர் எஸ். சுரேஷ் குமார், ரவீந்திரன், நிர்மல் ராஜ், ஜெயக்குமார், மேகநாதன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வழக்கறிஞர் பாலகுருசாமி, கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோர்ட் ராஜா, திமுக வட்டச் செயலாளர்கள் கதிரேசன், வழக்கறிஞர் சதீஷ்குமார், கங்கா ராஜேஷ், ரவீந்திரன், மருத்துவ அணி தலைவர் அருண்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு அந்தோணி கண்ணன், மாமன்ற உறுப்பினர்கள் ரெங்கசாமி, ஜெயா ஜாக்குலின் செல்வகுமார், மெடிண்டா டேனியல், ரெக்சிலின் ஜெயசீலி, மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

.

தொடர்புடைய செய்தி