தூத்துக்குடியில் 3-வது ரயில்வே கேட் மேம்பாலத்தில் இரும்பு பட்டைகள் ஒலி எழுப்புவதால் உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட எட்டயபுரம் ரோட்டில் 3-வது ரயில்வே கேட் மேம்பாலம் அமைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் ரயில்வே பாலத்துக்கு மேல் உள்ள 2 அடுக்குகள் பழுதடைந்தன. இதனை கண்டறிந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்றன.
இந்நிலையில், தற்போது பாலத்தின் இரும்பு பட்டைகள் கழண்டு வாகனங்கள் செல்லும்போது பெரும் ஒலி எழுப்புகிறது. இதனால் பெரிய விபத்துக்கள் ஏற்படும் முன்பு நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக இதை சரி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். மேலும் பாலத்தில் கனரக வாகனங்கள் செல்வதை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.