தேர்மாறனின் பிறந்தநாளான அரசு விழாவாக கொண்டவேண்டும் கோரிக்கை

60பார்த்தது
குமரி முதல் ராமேஸ்வரம் வரையிலான முத்துக்குளித்துறை பகுதியை ஆட்சி புரிந்தவர் தொன் கபிரியேல் தெக்குருஸ் வாஸ் கோமஸ் பரதவர்ம பாண்டியன் என்கிற தேர்மாறன். இவர் ஆங்கிலேய அரசை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் சிவகங்கை மன்னர் மருதுபாண்டியர் சகோதரர்களுக்கு போரிட ஆயுதங்களை தனது கப்பல் மூலம் வரவழைத்தும் சுதந்திர போராட்டத்திற்கு பல்வேறு உதவிகளை செய்தவர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த மீனவரான தேர் மாறனை சுதந்திர போராட்ட வரலாறு மறைக்கப்பட்ட நிலையில் தற்போது சுதந்திரப் போராட்ட வீரராக மத்திய அரசு பாண்டியபதி தேர் மாறனை அறிவித்து அவரது வாரிசுதாரர்களை அழைத்து கௌரவப்படுத்தி உள்ளது

இந்நிலையில் தூத்துக்குடியில் பாண்டியபதி 16ம் மன்னர் தொன் கபிரியேல் தெக்குருஸ் வாஸ் கோமஸ் தேர்மாறன் 272 ஆவது பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடியில் தெலசால் தேர்மாறன் கல்வறை வளாகத்தில் புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் சிறப்பு அழைப்பாளராக பாண்டியா பதி மன்னரின் வாரிசுதார் ஜோசப் லிகோரி சந்திர மோத்தா கலந்து கொண்டு மன்னரின் கல்லறையில் மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினார்.

மன்னர் தேர்மாறனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைத்து, டிசம்பர் 13 ஆம் தேதி பிறந்த தினமாக அறிவித்து தேர்மாறனின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். என மன்னரின் வாரிசு காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்
.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி