ஆபத்தான சாலை: வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்!

63பார்த்தது
ஆபத்தான சாலை: வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்!
தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையம் அருகே பள்ளமாக உள்ள சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி பேருந்து நிலையம் அருகே மீனாட்சிபுரத்தில் பிரதான சாலை சேதமடைந்து பள்ளமாக உள்ளது. இந்த சாலை வழியாக பழைய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வந்து செல்கின்றன. இந்த சாலையில் எதிரே பேருந்து வரும் சமயங்களில், இருசக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் எதுவும நடைபெறும் முன்பாக சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி