ஜூலை 12 வரை நீதிமன்ற புறக்கணிப்பு: வழக்கறிஞர்கள் முடிவு

85பார்த்தது
ஜூலை 12 வரை நீதிமன்ற புறக்கணிப்பு: வழக்கறிஞர்கள் முடிவு
தூத்துக்குடியில் வருகிற 12ஆம் தேதி வரை நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பது என்று வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் முடிவின்படி புதிய பிஎன்எஸ், பிஎன்எஸ்எஸ், பிஎஸ்ஏ ஆகிய சட்டங்களை முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் முடிவின்படி 12. 07. 2024 வெள்ளிக்கிழமை வரை தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் நீதிமன்ற பணிகளுக்கு செல்லாமல் இருப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி