தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி வணிக வளாகத்தை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பணிகள் நிறைவு பெறும் நிலையிலுள்ள மாநாட்டு மையம் மற்றும் வணிக வளாக கட்டிடத்தினை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, திமுக வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், செயற்குழு உறுப்பினர் சி. எஸ். ராஜா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.