தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை பங்கேற்ற நிகழ்ச்சியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் எம். எல். ஏ, ஊர்வசி அமிர்தராஜ் பாதியில் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் மண்டபத்தின் முன் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்களில் அவரது படம் மற்றும் பெயர் இடம்பெறாததால் எம்எல்ஏ அதிருப்தியை வெளிப்படுத்தாக கூறப்படுகிறது.