எட்டயபுரம் மற்றும் கோவில்பட்டி வட்டங்களுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் மற்றும் கோவில்பட்டி வட்டங்களுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், (02.07.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி, எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து, அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் இலவச வீட்டுமனை பட்டா குறித்த கோப்புகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அங்கு பயிலும் மாணவியர்களுடன் கலந்துரையாடி, கருவியியல் மற்றும் கட்டுப்பாட்டுவியல் ஆய்வகம், கணினி ஆய்வகம் மற்றும் மின்னணுவியல் ஆய்வகங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், மாணவியர்கள் தாங்கள் பயிலும் பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப செய்முறை விளக்கங்களுடன் கூடிய தொழிற்சார்ந்த அனுபவங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என ஆலோசனைகளை வழங்கினார்.