திமுக போஸ்டர்கள் கிளிப்பு; தூத்துக்குடியில் பரபரப்பு!

5914பார்த்தது
தூத்துக்குடி மாநகராட்சியில் இன்று எட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் உள்ளிட்ட 192 கோடி மதிப்பிலான பல்வேறு பணிகளை துவங்கி வைக்க தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே என் நேரு வருகை தர உள்ளார். ‌இதற்காக தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் சார்பில் சுவரொட்டிகள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, அமைச்சர்கள் கே என் நேரு, கீதா ஜீவன் , அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரின் படங்கள் மற்றும் பெயர்கள் உள்ளது. ஆனால் தூத்துக்குடி மாநகராட்சி மேயரும் பொதுக்குழு உறுப்பினரும் அமைச்சர் கீதா ஜீவனின் சகோதரருமான ஜெகன் பெரியசாமியின் பெயர் மற்றும் புகைபடம் இடம்பெறாமல் புறக்கணிக்கப்பட்டு இருந்தது. அமைச்சர் கீதா ஜீவனின் ஆதரவாளரான மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் அடித்துள்ள சுவரொட்டியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியின் படம் மற்றும் பெயர் புறக்கணிக்கப்பட்டுள்ள சம்பவம் அமைச்சர் மற்றும் மேயருக்கு இடையே நடக்கும் கோஷ்டி பூசல் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மேயரின் பெயர் மற்றும் புகைப்படம் இல்லாமல் ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழிக்கப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி