தூத்துக்குடி: வங்கி சார்பில் தூய்மைப் பணி வாகனம்..கனிமொழி எம்பி

83பார்த்தது
தூத்துக்குடி: வங்கி சார்பில் தூய்மைப் பணி வாகனம்..கனிமொழி எம்பி
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட தூய்மைப் பணிக்கான வாகனத்தை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார். தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பில், தூத்துக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட கழிவுநீர் அடைப்பு நீக்கும் வாகனத்தை கனிமொழி எம்பி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் திட்ட இயக்குநர் வின்சன்ட் மெனச்சரி, தூத்துக்குடி மண்டல மேலாளர் கௌதமன், தெற்கு கிளை மேலாளர் கண்ணன் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி