தூத்துக்குடி மாநகரில் கிறிஸ்து பிறப்பை வரவேற்கும் வகையில் பிரேசில், கனடா, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுவது போன்று அலங்கார ஊர்திகள் வடிவங்களில் உருவங்களை அமைத்து உற்சாக நடனமாடியபடி இளைஞர்கள் கொண்டாடுவது வழக்கமாகும்
இதை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு களிப்பார்கள்
இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் இந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு பிரம்மாண்டமாக நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு மிகப் பிரமாண்டமாக அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
இதில்
தூத்துக்குடி மாநகரில் லயன் ஸ்டவுன், மரக்குடி, மட்டக்கடை, பாத்திமாநகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த பல்வேறு வண்ண விளக்குகளால் அமைக்கப்பட்டிருந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் கப்பல், ஹெலிகாப்டர், ரோபோ, பச்சை மனிதன், மற்றும் கிறிஸ்மஸ் தாத்தா உள்ளிட்ட வாகனங்களில் கண்ணை கவரும் வகையில் மின் விளக்குகள் எரியவிட்டு இன்னிசை ஒலிக்க இளைஞர்கள் ஆட்டம் பாடத்துடன் ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பனிமய மாதா பேராலயம் வந்தடைந்தது.
இதை பல்வேறு பகுதிகளில் நின்று லட்சக்கணக்கான பொதுமக்கள் கண்டுகளித்தனர். இந்த ஊர்திகள் ஊர்வலததை முன்னிட்டு காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், நகர உதவி கண்காணிப்பாளர் மதன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.