கிறிஸ்மஸ் விழா; தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை

50பார்த்தது
தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பணிமயமாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நள்ளிரவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு



உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தங்கள் வீடுகளை வண்ண விளக்குகளால் அலங்கரித்து, இனிப்புகளை பகிர்ந்து, தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தைனைகளில் கலந்து கொண்டு இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில். தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் பங்குத்தந்தை ஸ்டார்வின் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. இதில் இயேசு கிறிஸ்து பிறந்ததை காட்சிப்படுத்தும் வகையில் சிறிய குடில்கள் அமைக்கப்பட்டு ஏசுவின் பிறப்பை உணர்த்தும் தத்ரூப காட்சிகள் இடம் பெற்றன. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தூத்துக்குடி பனிமய மாதா கோவிலில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டு இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்க சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி