கார் டிரைவருக்கு கத்திக்குத்து: 2பேர் கைது!

74பார்த்தது
கார் டிரைவருக்கு கத்திக்குத்து: 2பேர் கைது!
தூத்துக்குடியில் முன் விரோதத்தில் கார் டிரைவரை கத்தியால் குத்திய 2பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை பத்திரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகன் சக்திவேல் (36). தூத்துக்குடி டிஎம்பி காலனியைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் மாரியப்பன் (46). கார் டிரைவர். இந்நிலையில், சக்திவேல் தனது காரை மாரியப்பனிடம் அடகு வைத்து ரூ. 1. 5லட்சம் பணம் வாங்கினாராம்.

6 மாதங்களுக்கு பின்னர் பணத்தை கொடுத்துவிட்டு காரை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் அவர் காரை திருப்பி தரவில்லையாம். இதில் ஆத்திரம் அடைந்த சக்திவேல் மற்றும் அவரது நண்பரான சில்வர்புரம் செல்வராஜ் மகன் சுப்புராஜ் (35) ஆகிய 2பேரும் சேர்ந்து நேற்று பைக்கில் வந்து கொண்டிருந்த மாரியப்பனை வழிமறித்து தாக்கி கத்தியால் குத்தினார்களாம்.

இதில் காயம் அடைந்த மாரியப்பன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) வனசுந்தர் கொலை முயற்சி வழக்குப் பதிந்து சக்திவேல் மற்றும் சுப்புராஜ் ஆகிய 2பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி