தூத்துக்குடி சுந்தரவேல் புரம் பகுதியல சேர்ந்தவர் சந்தனராஜ் கார்பென்டர் இவர் கடந்த 21 ஆம் தேதி புதுக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் வரும் போது ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயம் அடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மூளை சாவு அடைந்த சந்தனராஜின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து சந்தன ராஜன் கண்கள் மற்றும் அவரது தோல் ஆகியவை உடலுறுப்பு தானத்திற்காக வழங்கப்பட்டு திருநெல்வேலி மற்றும் மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கொண்டு செல்லப்பட்டது.
இவ்வாறு உடல் உறுப்பு தானம் செய்த சந்தன ராஜின் உடலுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைச்சர் கீதா ஜீவன் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் மதன் மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.