விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!

62பார்த்தது
தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாட உள்ள நிலையில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.  


தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 260க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றன இந்நிலையில் தற்போது மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டுவதாலும் மீன்களுக்கு விலை குறைவாக காணப்படுவதால் ஏராளமான விசைப்படைகள் கடலுக்கு செல்லவில்லை குறைவான படகுகளை கடலுக்குச் சென்று வந்தன


இந்நிலையில் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட உள்ள நிலையில் ஏராளமானோர் அசைவ உணவுகளை தவிர்ப்பர் இதன் காரணமாக மீன்களுக்கு விலை கிடைக்காத நிலை ஏற்படும் இதை கருத்தில் கொண்டு தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்குச் செல்லாமல் தங்கள் படகுகளை விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி