தூத்துக்குடி மாவட்ட பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் சார்பில் முயல்குட்டிகள் தலைவிக்கான பயிற்சி முகாம் 3 நாட்கள் நடைபெற்றது.
தூத்துக்குடி கோல்டன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் வைத்து 3 நாட்கள் முயல்குட்டிகள் தலைவிக்கான பயிற்சி முகாம் நடைப்பெற்றது. முகாமிற்கு வந்திருந்தவர்களை மாவட்ட செயலாளர் செ. எட்வர்ட் ஜான்சன்பால் வரவேற்று பேசினார். பயிற்சிபெற வந்திருந்த தூத்துக்குடி மாவட்ட ஆசிரியைகளை சாரண, சாரணிய இயக்கத்தில் பல பயிற்சிகளை பெற்று, மாணவ சமுதாயத்தை நல்ல குடிமக்களாக உருவாக்க வேண்டும் என்று மாநில துணை ஆணையரும் (சாரணியர் பிரிவு) மாவட்ட பயிற்சி ஆணையருமான ஆ. ஜெயாசண்முகம் வாழ்த்தி பயிற்சி முகாமினை தொடங்கி வைத்தார்.
பயிற்சி முகாமில் தேசிய பயிற்சியாளர் சண்முக நாச்சியார் அவர்கள் முயல்குட்டி தலைவிகளுக்கான (Bunnies Aunties) பயிற்சியில் ஆடல், பாடல்கள், கைவினைப் பொருட்கள் செய்தல் விளையாட்டுக்கள், ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல் என அனைத்தையும் கற்றுக் கொடுத்தார்கள். 3 வயது முதல் 5 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு எவ்வாறு மகிழ்ச்சியுடன் கற்றுக் கொடுப்பது என்பதையும் தெளிவாக சொல்லிக் கொடுத்தார்கள். பயிற்சி முகாம் நிறைவில் மாவட்ட ஆணையர் பி. சரவணன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.