தூத்துக்குடி தூய பனிமய மாதா திருவிழாவை முன்னிட்டு பக்தா்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு காவல் துறை சாா்பில் 10 இடங்களில் வாகன நிறுத்துமிட வசதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வ. உ. சி சாலை வழியாக வரும் வாகனங்கள்: தூத்துக்குடி வ. உ. சி. சாலை வழியாக வரும் வாகனங்கள் பழைய நகராட்சி அலுவலக சந்திப்பு, வடக்கு காட்டன் சாலை, ரயில் நிலைய சாலை வழியாக சென்று புனித பிரான்ஸிஸ் சேவியா் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், ரயில் நிலைய சாலை, பிரெஞ்சு சேப்பல் தெரு வழியாக சென்று சின்னக்கோவில் வளாகத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்தலாம்.
தூத்துக்குடி வ. உ. சி. சாலை வழியாக பழைய நகராட்சி அலுவலக சந்திப்பு, தீயணைப்புதுறை சந்திப்பு, தெற்கு காட்டன் சாலை வழியாக சென்று புனித பீட்டா் கோயில் தெருவிலுள்ள லசால் பள்ளி மைதானம்
மற்றும் தெற்கு காட்டன் சாலை, பிபிஎம்டி சந்திப்பு வழியாக சென்று ஜாா்ஜ் சாலையில் உள்ள சால்ட் ஆபீஸ் வளாகத்தில் இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்தலாம்.
தருவை மைதானம் மற்றும் பிபிஎம்டி சந்திப்பு வழியாக சென்று லயன்ஸ் டவுணிலுள்ள காரப்பேட்டை ஆண்கள் பள்ளி மைதானத்தில் இரண்டு
மற்றும் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்தலாம்.